தடகளம்; என்.ஜி.பி.,க்கு வெள்ளி 

Added : ஜன 08, 2020
Share
Advertisement

கோவை:தேசிய அளவிலான தடகள போட்டி, 'போல் வால்ட்' பிரிவில், என்.ஜி.பி., கல்லுாரி மாணவர் கவுதம், வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். தேசிய அளவில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான தடகள போட்டி, பெங்களூருவில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி, ஒடிசா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுதல், 'போல் வால்ட்', சங்கிலி குண்டுஎறிதல், நடை, தொடர் ஓட்டம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் கோவை, பாரதியார் பல்கலை அணியில், என்.ஜி.பி., கல்லுாரியின் கவுதம் தேர்வாகினார். இவர், 'போல் வால்ட்' போட்டியில், 4.65மீ., உயரம் தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவரை, கல்லுாரியின் முதல்வர் ராஜேந்திரன், தாளாளர் தவமணி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X