பரமக்குடி பகுதியில் பலியாகும் மயில்கள் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா

Added : ஜன 08, 2020
Advertisement

பரமக்குடி:பரமக்குடி பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் ஆங்காங்கே சந்தேகத்திற்கிடமான முறையில் பலியாகி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நயினார்கோவில், போகலுார், பரமக்குடிஒன்றியங்களில் சீமை கருவேல மரங்கள் அதிகம் அடர்ந்துள்ளன.மேலும் கிராமங்கள் தோறும் குளம், ஊரணி மற்றும் கண்மாய்கள், அதிகளவில் உள்ளது. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் மழை பொழிவு குறைவால் விவசாயிகள் நிலங்களில் சீமை கருவேல மரங்களை வளர விட்டுள்ளனர்.

இதனால் காட்டுப்பகுதியான சீமை கருவேல மரங்களுக்கு இடையே மயில்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. இதற்கு பிரத்யேகமாக தண்ணீர் வசதி செய்யப்படாமல் உள்ளதால், தொடர்ந்து நகர் புறங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள தோப்புகளில் தண்ணீர் அருந்த செல்கின்றன.அப்போது வாகனங்களில் சிக்கி இறக்கின்றன.

தற்போது பருவ மழை பொழிவால் பரமக்குடி தாலுகா முழுவதும் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் மயில்கள் நெல் வயல்களில் இறங்கி தானியங்களை உண்கின்றன. இதனால் சிலர் விஷம் கலந்த உணவை வைக்கின்றனர். இதனை உண்ணும் மயில் உள்ளிட்ட பறவை இனங்கள் ஆங்காங்கே செத்து மடிகின்றன.எனவே வனத்துறையினர் தேசிய பறவைகளான மயில்களை பாதுகாக்க குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் வசதி செய்வதுடன், மருந்து வைத்து பறவைகளை அழிக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X