நலத்திட்ட பொருட்கள் தரம் எப்படி? பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

Added : ஜன 08, 2020
Advertisement

கோவை:நலத்திட்ட பொருட்களின் தரத்தை பரிசோதிக்க, மறு ஆய்வுக்கு அனுப்புமாறு, தமிழ்நாடு பாடநுால் கழகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. டெண்டர் அறிவிக்கப்பட்ட பின், குறிப்பிட்ட நிறுவனங்கள், அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திற்கு, இப்பொருட்களை வினியோகம் செய்வது வழக்கம்.இதை உடனே, மாணவர்களுக்கு வழங்காமல், அதன் தரத்தை பரிசோதித்த பின்பே, பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகம் முழுக்க தற்போது, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஜியாமெட்ரி பாக்ஸ்' மற்றும் 'கிரையான்ஸ்' எனும் கலர் பென்சில்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தரத்தை பரிசோதிக்க, பாடநுால் கழகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'டெண்டர் அறிவித்த பின் சமர்ப்பிக்கப்படும், மாதிரி நலத்திட்ட பொருட்கள், தரம் வாய்ந்ததாக இருக்கும். மொத்தமாக தயாரித்து மாவட்டங்களுக்கு அனுப்பும் போது, தரத்தில் குறைபாடு இருப்பதாக புகார்கள் எழலாம். இதற்காகவே, நலத்திட்ட பொருட்களை பாடநுால் கழகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு முன், பள்ளிகளுக்கு இப்பொருட்களை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X