பொது செய்தி

தமிழ்நாடு

பனியில் நனைந்து வீணாகும் பஞ்சு தியாகதுருகம் விவசாயிகள் கவலை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

தியாகதுருகம்:தியாகதுருகம் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக பருத்தி காய்களிலிருந்து வெளிப்பட்டுள்ள பஞ்சு நனைந்து வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தியாகதுருகம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,000 ஏக்கர் மானாவாரி நிலத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவமழையின் போது கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு 5 மாதத்தில் விளைந்து மகசூல் கொடுக்கிறது. தென்மேற்கு பருவமழை விதைக்கும் தருணத்தில் கை கொடுத்ததால் செடிகள் செழித்து வளர்ந்தது.இதன் காரணமாக செடிகளில் அதிக காய்களுடன் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பெய்த தொடர் மழையால் காய்கள் அழுகி பஞ்சு வீணானது.பஞ்சு அறுவடை தருணத்தில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முற்றிய காய்கள் வெடித்து வெளிப்பட்ட பஞ்சை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பனியில் பஞ்சு நனைந்து சேதமடைவது அதிகரித்துள்ளது.இதனால் தரம் குறைந்து, பஞ்சுக்கு உரியவிலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X