'அல்ட்ரா கோப்பை'க்கான இறகுப்பந்து போட்டி துவக்கம்

Added : ஜன 08, 2020
Advertisement

கோவை:நான்காம் ஆண்டு, 'அல்ட்ரா கோப்பை'க்கான இறகுப்பந்து போட்டிகள், கேரளா கிளப்பில் நேற்று துவங்கின. அல்ட்ரா நிறுவனம், கேரளா கிளப் இணைந்து, ஆண்டுதோறும் 'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து போட்டிகளை நடத்தி வருகின்றன. நான்காம் ஆண்டு போட்டிகள், கேரளா கிளப்பில் நேற்று காலை துவங்கின. போட்டியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், போலீசார் மற்றும் கேரளா கிளப்பை சேர்ந்த என, 30 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியை, மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா துவக்கி வைத்து, வீரர்களுக்கான ஆடைகளை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் மத்தியில், விளையாட்டின் நோக்கம், வெற்றி தோல்வி, சகோதரத்துவம் உள்ளிட்டவை குறித்து பேசி உற்சாகப்படுத்தினார். போட்டிகள் 'நாக்- அவுட், லீக்' அடிப்படையில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. அல்ட்ரா நிறுவன சேர்மன் சிவசாமி, கேரளா கிளப் தலைவர் ஸ்ரீகுமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X