திருப்புதல் தேர்வு: வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புதல் தேர்வு: வினாத்தாள் சமூக வலைதளங்களில் 'லீக்' 

Added : ஜன 08, 2020

கோவை:பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நேற்று துவங்கிய நிலையில், பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேற்று மொழிப்பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு துவங்கியது.பிளஸ் 2 கணித பாடத்துக்கான தேர்வு வரும், 13ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ஷேர் சாட்' போன்ற செயலிகளில், கணித வினாத்தாள் வெளியாகி இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே அரையாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாளும், பிளஸ் 2 வேதியியல், உயிரியல் பாட வினாத்தாள்களும், 'ஷேர் சாட்' செயலியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடவுள்ளதாக, கல்வித்துறை தெரிவித்தது. தற்போது திருப்புதல் தேர்வு சமயத்திலும், சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியாவதால், மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது.'அது வெளிமாவட்ட வினாத்தாளுங்க!'கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 10 நோடல் மையங்களில், வினாத்தாள் கட்டுகள் பாதுகாக்கப்பட்டு, தேர்வின் போது மட்டுமே, பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாவதால், வெளி மாவட்ட வினாத்தாளாகவும் இருக்கலாம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X