பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கையை கழுத்தில் மாட்டி நுாதன முறையில் முதியவர் மனு

Added : ஜன 08, 2020
Share
Advertisement
 கோரிக்கையை கழுத்தில் மாட்டி நுாதன முறையில் முதியவர் மனு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு நுாதன முறையில் முதியவர் மனு அளித்தார்.
தியாகதுருகம் அடுத்த வேங்கைவாடியைச் சேர்ந்தவர் சம்பத், 60; இவரது தந்தை நடேசனுக்கு சொந்தமாக இருந்த இடத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரின் பெயருக்கு மாற்றி பட்டா வழங்கப்பட்டுள்ளது.அதனை மீண்டும் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் என தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்துள்ளார்.
ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனைக் கண்டித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு தனது கோரிக்கையை எழுதி அந்த அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு பட்டா மாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X