பொது செய்தி

தமிழ்நாடு

கிடைக்குமா! உளுந்துக்கு கூடுதல் விலை...மகசூல் குறைந்ததால் எதிர்பார்ப்பு

Added : ஜன 08, 2020
Advertisement
 கிடைக்குமா!  உளுந்துக்கு கூடுதல் விலை...மகசூல் குறைந்ததால் எதிர்பார்ப்பு

உளுந்துார்பேட்டை:மழை காரணமாக உளுந்து மகசூல் குறைந்ததால் கூடுதல் விலை கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், இங்கு, கரும்பு, நெல், வேர்க்கடலை, உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.தற்போது, மானாவாரி பயிரான உளுந்து அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இந்த உளுந்து பயிரானது புரட்டாசி 15ம் தேதிக்கு பிறகும் ஐப்பசி 15ம் தேதிக்குள்ளும் பயிரிடப்படும் காலமாகும். உளுந்து விதைக்கப்பட்டு 80 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படுகிறது.
இந்த உளுந்து பயிர் வகையில் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 8, மதுரை 1 ஆகிய நான்கு வகையான உளுந்து பயிர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.ஆடுதுறை 3, ஆடுதுறை 5 ஆகிய உளுந்து வகை பயிர்கள் காஞ்சிபுரம், தஞ்சாவூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. உளுந்து பயிருக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் உளுந்து பயிரினை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
குறிப்பாக உளுந்துார் பேட்டை மற்றும் திருநாவலுார் சுற்றியுள்ள பகுதி களில் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்புகளில் 12 ஆயிரம் ஹெக் டேர் பரப்பளவில் மானாவாரி பயிரான உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.இந்த உளுந்து பயிரால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருக்கின்றனர். அதே போல் உளுந்து மகசூல் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆனால் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பூச்சி தாக்குதலால் உளுந்து மகசூல் அதிக அளவில் கிடைப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கும்.கடந்த மாதம் உளுந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 7,000 ரூபாய் வரை உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது உளுந்து அறுவடை துவங்கியுள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
.மேலும் அரசு, உளுந்துக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.'தானே' புயலின்போது உளுந்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்தது. அப்போது விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இதனால் வடமாநிலத்தில் இருந்து உளுந்து தமிழகத்திற்கு வரத் துவங்கியதால் உளுந்து விலை குறையத் தொடங்கியது. ஆனால் தற்போது வட மாநிலத்தில் 90 சதவீதம் அளவில் உளுந்து விளைச்சல் இல்லாததாலும், இங்கு உளுந்து விளைச்சல் குறைவாக இருப்பதாலும் உளுந்துக்கு அதிக விலை கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
சிண்டிகேட் முறைஒழிக்கப்படுமா?
விளை பொருட்கள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும்போது பல மார்க்கெட் கமிட்டிகளில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறிப்பிட்ட விலைக்கு மேல் விலை நிர்ணயம் செய்வ தில்லை. இதனால் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிண்டிகேட் முறையை தடுக்க முயற்சிக்கும் அதிகாரிகளுக்கு சில வியாபாரிகள் முட்டுக்கட்டையாக இருப்பதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். சிண்டிகேட் முறையை ஒழித்தால் மட்டுமே விவசாய பொருளுக்கு உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X