சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெபிட் கார்டு மூலம் பணம் மோசடி செய்தவருக்கு சிறை

Added : ஜன 08, 2020
Advertisement

போத்தனுார்:போத்தனுாரை அடுத்த சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 46; ஊர் காவல் படையில் உள்ளார். கடந்த மாதம் இவர் சிட்கோ அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க முயன்றும், முடியவில்லை. அங்கிருந்த ஒருவர் முயற்சித்தும் பலனில்லை.சுரேஷ்குமார் அங்கிருந்து சென்ற பின், அவரது மொபைல்போனுக்கு வந்த குறுந்தகவல்களில், 19,600 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வங்கியிலும், போத்தனுார் போலீசிலும் சுரேஷ்குமார் புகார் செய்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதே ஏ.டி.எம்., மையத்தில், தனக்கு உதவி செய்த நபரை சுரேஷ்குமார் பார்த்தார். அங்கிருந்தோர் உதவியுடன் அவரை பிடித்து, போத்தனுார் போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் விசாரணையில், அவர் மதுரை, திருமங்கலத்தை சேர்ந்த கதிரேசன், 48 என தெரிந்தது. இவர் பலரிடம் இதுபோல் உதவி செய்வதாக கூறி, அவர்களது டெபிட் கார்டை வாங்கிய பின், தன்னிடமுள்ள கார்டை மாற்றி கொடுத்து விடுவார். பின் அந்த கார்டு மூலம் பணத்தை எடுத்து விடுவார். இம்முறையில் பீளமேடு உட்பட பல இடங்களில், லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிந்தது.வழக்கு பதிவு செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X