பொது செய்தி

தமிழ்நாடு

புது நெல்லு பொங்கலுக்கு காத்திருக்கு!

Added : ஜன 08, 2020
Advertisement
 புது நெல்லு பொங்கலுக்கு காத்திருக்கு!

பேரூர்:கோவை புறநகர் பகுதிகளில், விவசாயிகளுக்கு சின்னவெங்காயம் கை கொடுத்த நிலையில், நெல் விளைச்சலும் நன்கு உள்ளது.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில், கடந்த ஆண்டு, பருவமழைகள் கை கொடுத்தன. இதனால், நரசீபுரம், முட்டத்துவயல், பச்சான்வயல், செம்மேடு, தண்ணீர்பந்தல், நல்லுார்வயல், சாடிவயல் பகுதிகளில், ஜூலையில் நெல் நாற்றாங்கால் விடப்பட்டது.வைதேகி, நீலி வாய்க்கால்கள், கல்கொத்தி நீர் மற்றும் போர்வெல் பாசனத்தில் வெள்ளப் பொன்னி, பவானி, ஐஆர் - 20 ஆகிய ரகம் சாகுபடி செய்யப்பட்டது. உரங்களின் விலை அதிகரித்தாலும், நம்பிக்கையுடன் உரங்களை வாங்கி, பயிர்களை காப்பாற்றினர்; விளைச்சல் நன்றாக உள்ளது.தற்போது, அறுவடை நடந்து வருகிறது. கூலியாட்கள் தட்டுப்பாடு காரணமாக, இயந்திரங்களை வரவழைத்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில், ஒரே நேரத்தில் அறுவடை துவங்கியுள்ளதால், இயந்திர வாடகை அதிகரித்துள்ளது.நல்லுார்வயல் விவசாயிகள் கூறுகையில், 'அறுவடை இயந்திரங்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. வெளிப்பகுதிகளில் இருந்து, இயந்திரங்கள் வருவதால், மணிக்கு, ரூ.1,800 - 2,000 வரை கேட்கின்றனர். வேளாண் துறை சார்பில், நெல் அறுவடை இயந்திரம் வழங்கினால் பயன் தரும்' என்றனர்.சின்னவெங்காயம் கை கொடுத்த நிலையில், நெல் விளைச்சலும் நன்றாக உள்ளதால், விவசாயிகள் பொங்கல் பண்டிகையை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X