பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.7 கோடி சொத்து மீட்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, 32.24 சென்ட் 'ரிசர்வ் சைட்' மீட்கப்பட்டு, சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 53வது வார்டில், பாலாஜி நகர் மற்றும் தனலட்சுமி நகர் உள்ளது. 1971ல் இவ்விரு லே-அவுட்டுகளுக்கும், நகர ஊரமைப்பு துறை அனுமதி வழங்கியிருக்கிறது.பாலாஜி நகர், 8.57 ஏக்கர் பரப்பு கொண்டது; 79 மனைகள் இருக்கின்றன. பொது ஒதுக்கீடு - 85 சென்ட். இதில், கிணறு - 12 சென்ட், விளையாட்டு மைதானம் - 30 சென்ட், பொது பயன்பாடு - 15 சென்ட், திறந்தவெளி - 7 சென்ட்.தனலட்சுமி நகர் - 3.82 ஏக்கர் பரப்பு கொண்டது; 35 மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. பொது ஒதுக்கீடு, 38 சென்ட். வருவாய் ஆவணங்களில், கோவை மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருக்கிறது.லே-அவுட் உருவாக்கியவர்கள், 'ரிசர்வ் சைட்'டை வெவ்வேறு நபர்களுக்கு விற்று விட்டனர். பாலாஜி நகர் மெயின் ரோட்டில், திறந்தவெளியாக இருந்த, 7 சென்ட் இடத்தையும் சேர்த்து, மூன்று மாடிகளுடன், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.குடியிருப்போர் நலச்சங்கத்தினர், 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்; அதில், 'ரிசர்வ் சைட் மாநகராட்சிக்கு சொந்தமானது' என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்ததும், 'ரிசர்வ் சைட்' மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு சைட்டுகளை மீட்க, நகரமைப்பு பிரிவினர் ஆவணங்கள் தயாரித்து வருகின்றனர்.முன்னதாக, திறந்தவெளியாக உள்ள, 32.24 சென்ட் இடத்தை சுற்றிலும், கம்பி வேலி அமைத்து, 'மாநகராட்சிக்கு சொந்தமானது' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 கோடி இருக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X