தமிழ்நாடு

மேற்கு புறவழிச்சாலை திட்டம் வேகமெடுக்கிறது! நிலம் கையகப்படுத்த அறிவிப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
 மேற்கு புறவழிச்சாலை திட்டம் வேகமெடுக்கிறது! நிலம் கையகப்படுத்த அறிவிப்பு

கோவை:கோவை மேற்குபுறவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள நான்கு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 32.43 கி.மீ., நீளத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த ரூ.320 கோடி, ரோடு அமைக்க ரூ.505 கோடி என, 825 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.ஐகோர்ட் உத்தரவுமொத்தம், 355.5 ஏக்கர் நிலம், 16 கிராமங்களில் கையகப்படுத்த வேண்டும். 12 கிராமங்களில் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள, 4 கிராமங்களுக்கு நில அளவீடு செய்து நோட்டீஸ் வழங்குவதற்குள், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லாது' என ஐகோர்ட் உத்தரவிட்டது.சிக்கல் நீங்கியது!அதனால், அக்கிராமங்களில் நில அளவீடு செய்வது தடைபட்டது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை தளர்வு செய்யப்பட்டதாலும், கோர்ட்டில்மேல்முறையீடு செய்து, அனுமதி பெறப்பட்டதாலும், நிலம் கையகப்படுத்த இருந்த சிக்கல் விலகியது.சுண்டக்காமுத்துார், கூடலுார் தெற்கு, மதுக்கரை, பன்னிமடை ஆகிய கிராமங்களில், எந்தெந்த பகுதிகளில், எவ்வளவுநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, நில உரிமையாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சேபனை இருந்தால்மக்கள் தெரிவிக்கலாம்மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மேற்கு புறவழிச்சாலை அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்த, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளோம். பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால், உரிய விளக்கம் அளித்து விட்டு, அரசிதழில் வெளியிடப்படும். அதன் பின், நில மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு, நஷ்ட ஈடு வழங்கி, கையகப்படுத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X