பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு;

Added : ஜன 08, 2020
Advertisement

தெரு விளக்கு எரிவதில்லைவிளாங்குறிச்சி, கொங்கு மாநகர், பேங்கர்ஸ் காலனியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 25), கடந்த ஆறு மாதங்களாக விளக்கு எரிவதில்லை.-ஹரி, பேங்கர்ஸ் காலனி.

சிக்னலில் தடுமாற்றம்திருச்சி ரோடு, சிங்காநல்லுார் போக்குவரத்து சிக்னல் அருகில் ரோடு, மேடும் பள்ளமுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- ஜெயராம், ஒண்டிப்புதுார்.

டவுன்ஹாலில்பயணிகள் அவதிபெரியகடை வீதி, டவுன்ஹால், மணிக்கூண்டு அருகில் உள்ள, பேரூர் பஸ் ஸ்டாப் நிழற்கூரையை ஒட்டி, ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், நடக்க வழியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.- பாலச்சந்தர்,கே.என்.ஜி.புதுார்.

குண்டும் குழியுமான சாலைபோத்தனுார், ஜி.டி.டேங்க் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சாலையை செப்பனிடுவது அவசியம்.- நித்தியானந்தன், போத்தனுார்.

மின் கம்பத்தை இடம்மாற்றணும்பெரியகடை வீதி, மா.ந.க.,வீதியில், வீட்டை ஒட்டி நிறுவப்பட்டுள்ள, ஆபத்தான மின் கம்பத்தை(எண்: 373) இடம் மாற்றி அமைக்க வேண்டும்.- திருமுருகன், மா.ந.க.,வீதி.

விளக்கு எரிவதில்லை.மாநகராட்சி, 76வது வார்டுக்குட்பட்ட, செல்வபுரம் - பேரூர் ரோட்டில் உள்ள, மின் கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- முத்துகுமார், செல்வபுரம்.

குழாய் உடைப்புகாந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள, மின்வாரிய அலுவலகம் முன், பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகிறது.- கணேஷ்குமார், ராம்நகர்.

ரத்தினபுரியில் குழந்தைகளுக்கு ஆபத்துரத்தினபுரி, கோவிந்தசாமி வீதியில் உள்ள, பால்மாரியம்மன் கோவில் அருகில், திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயில், பள்ளி குழந்தைகள் தவறி விழுகின்றனர். சாக்கடையை சிலாப் வைத்து மூட வேண்டும்.- ரமேஷ், கக்கன் வீதி.

நீரும் ரோடும் வீணாகிறதுஇடையர் வீதியில், பிரதான குழாய் உடைப்பால், தண்ணீர் சாலை முழுவதும் ஓடுகிறது. இங்கு அமைக்கப்பட்ட, தார் ரோடும் சேதமாகிறது.- அருண்குமார்,இடையர் வீதி.

குடிநீர் வினியோகம் இல்லைமாநகராட்சி, 98வது வார்டுக்கு உட்பட்ட, ராமானுஜ நாயுடு வீதியில், குடிநீர் வினியோகித்து, 15 நாட்களுக்கு மேலானதால், இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.- கனகராஜ், குறிச்சி.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிஎன்.ஜி.ஜி.ஓ., காலனி, ரங்கசாமி வீதியில் உள்ள ஓம் சக்தி கோவிலில், கழிப்பிட வசதி இல்லாததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். - பாலகிருஷ்ணன், துடியலுார்.

மின் கம்பத்தில்விளக்கு இல்லைவிளாங்குறிச்சி ரோடு, பால்காரர் தோட்டம் எதிரில் உள்ள, விக்னேஷ் நகரில், தெருவிளக்குகள் எரிவதில்லை. -விக்னேஷ், பீளமேடு.

விளக்கு எரிவதில்லைதேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, சுப்பு கார்டன் முதல் தொட்டதாசனுார் வரை உள்ள, சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை. - அருண்பிரசாத், தொட்டதாசனுார்.

தண்ணீரில் 'கப்' அடிக்குதுலிங்கப்ப செட்டி வீதி 2ல், வினியோகிக்கப்படும் போர்வெல் தண்ணீரில், கழிவு நீரும் சேர்ந்து வருகிறது. கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. நீரை பயன்படுத்த முடியவில்லை.- விஷ்ணுபிரியா, லிங்கப்பசெட்டி வீதி.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மதுக்கரை பேரூராட்சி கடைவீதி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பால், குழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இக்கால்வாயை துார்வாரி அடைப்பை நீக்க வேண்டும்.- சுந்தர்ராஜன், மதுக்கரை.

சாக்கடை அடைப்பு; மக்கள் அவதிமாநகராட்சி, 63வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், சி.எம்.சி.,காலனி, மார்க்கெட் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ரஞ்சித்குமார்,மார்க்கெட் வீதி.

வேகத்தடை வேண்டும்சாய்பாபா கோவில் பின்புறம் உள்ள, அருணாசலா வீதி 2ல் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்க வேண்டும்.- முருகன், சாய்பாபாகோவில்.

சாலையை சீரமைக்கணும்சூலுார், அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பிள்ளையார் கோவில் - சங்கோதிபாளையம் வரை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது.- நித்யானந்தம், வரப்பிள்ளையார் கோவில்.

அரைகுறைபணியால் அவதிசுந்தராபுரம் அருகே மாச்சம்பாளையம், ரயில்வே பொங்காளிகோனார் வீதியில், சாக்கடை கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுமண், அதன் அருகிலேயே கொட்டப்பட்டுள்ளது.-அக்னீஸ்வரி, மாச்சம்பாளையம்.

குடிநீர் வீண்காமராஜ் ரோடு, வரதராஜபுரம், கார்த்திகேயா மில் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- வினித், சவுரிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X