பொது செய்தி

தமிழ்நாடு

ரத்ததானத்தை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம்

Added : ஜன 08, 2020
Advertisement
 ரத்ததானத்தை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம்

விழுப்புரம்:ரத்த தானத்தை வலியுறுத்தி, மேற்கு வங்க ஆசாமி கொல்கத்தாவில் இருந்து மேற்கொண்ட சைக்கிள் பிரசார பயணம் நேற்று விழுப்புரத்தை வந்தடைந்தது.
மேற்கு வங்கம், ஜாப்தானி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயதேவ்ராவூத், 50; அங்குள்ள, ரத்ததான சேவை மையத்தில் உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த 1993ம் ஆண்டில் இருந்து ரத்ததானம் செய்வதை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.'இந்தாண்டில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிர் கூட போகக்கூடாது. ரத்ததானம் செய்வதன் அவசியம்' ஆகியவற்றை வலியுறுத்தி, ஜெயதேவ்ராவூத் கடந்த நவம்பர் 7 ம் தேதி, கொல்கத்தாவில் தனது சைக்கிள் பிரசாரத்தை துவக்கினார்.
இவர் ஒடிசா, ஆந்திரா, சென்னை வழியாக நேற்று விழுப்புரம் வந்தடைந்தார்.இதையடுத்து, இவர் திருச்சி, கேரளா வரை சென்று தனது சைக்கிள் பிரசார பயணத்தை முடிக்கிறார். மொத்தம் 9,000 கிலோ மீட்டர் துாரம் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.ஜெயதேவ்ராவூத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சமுகநல ஆர்வலர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X