பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பிரியர்களே... இது உங்களுக்காக!

Added : ஜன 08, 2020
Advertisement
 உணவு பிரியர்களே... இது உங்களுக்காக!

கோவை:கோவை ஓட்டல்கள் சங்கம் சார்பில், வரும் 10ம் தேதி முதல் மூன்று நாட்கள், மாபெரும் உணவு திருவிழா, கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.இது குறித்து, உணவு திருவிழா தலைவர் பாலசந்தர் மற்றும் சங்க செயலாளர் சிவக்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை விழாவின் ஒரு பகுதியாக, மாபெரும் உணவு திருவிழா, கொடிசியா திறந்தவெளி மைதானத்தில் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட, ஸ்டால்களில், அனைத்து மாநில கலாசார உணவும் சுவைக்கலாம்.சர்க்கரை நோயாளிகள் உட்பட, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு, விற்பனைக்கு வைக்கப்படும்.பிரபல இசைக்கலைஞர் ஸ்டீபன் தேவசி, பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பிரபலங்களின் இசை கச்சேரியும் இடம்பெறும். புதுவிதமான அனுபவத்தை தரும் இந்த உணவு திருவிழாவுக்கு, 120 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அனுமதி இலவசம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X