பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் திறன் வளர்ப்பு பயிற்சி

Added : ஜன 08, 2020
Advertisement

கோவை:கோவை, சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில், 'மாணவர்களுக்கான தற்போதைய தேவைகள்' எனும், திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.கோவை சி.டி.எஸ்., நிறுவன இணை இயக்குனர் அருண் திவாகரன் பங்கேற்று, சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக, நேரடி காரணங்களை காட்டி விளக்கமளித்தார்.தன்னம்பிக்கையை அதிகரிப்பது, வாழ்க்கையில் வெற்றி பெறுவது, நேர்காணலின்போது சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்தும், மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X