பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் வினாடி வினா; கோவை பள்ளிகள் அசத்தல்!

Added : ஜன 08, 2020
Advertisement
 தினமலர் வினாடி வினா; கோவை பள்ளிகள் அசத்தல்!

கோவை:கோவையில் நேற்று மட்டும் ஐந்து பள்ளிகளில், தினமலர் மெகா வினாடி வினா போட்டியின், காலிறுதி சுற்று நடந்தது.தினமலர், கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், இந்த மெகா வினாடி வினா போட்டி, நேற்று சிங்காநல்லுாரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.,ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ், பள்ளியில் நடந்தது. தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 60 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த இளநிலா, மகதி திருமால் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் ரமேஷ் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.என்.எம்.மெட்ரிக் பள்ளிநீலிகோணாம்பாளையத்தில் உள்ள என்.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாக, பி அணியைச் சேர்ந்த ஆர்த்தி, சபிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளியின் முதல்வர் ஜெயராமன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியைகள், நித்யா, கலைச்செல்வி, சங்கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.சி.எஸ்.அகாடமிகோவைப்புதுாரில் உள்ள சி.எஸ்.அகாடமி பள்ளியில் நடந்த போட்டியில், 325 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான போட்டியில், மீனா, ஹர்ஷிதா என்ற மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளியின் இயக்குனர் நித்யாசுந்தரம், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜோதிராய் பரிசுகளை வழங்கினர். ஆசிரியைகள், வனஜா, ஹெலன், பூங்கோதை, மேனகா, சாந்தி, இந்திராணி ஆகியோர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.ஆதித்யா பள்ளிகுரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 250 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான போட்டியில் ஜாய்சாலமோன், ஹரிஸ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளி முதல்வர் விஜயபிரபா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை, ஆசிரியைகள் காயத்ரி, நந்தினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.சுதந்திரா பள்ளிஅத்திபாளையத்தில் உள்ள சுதந்திரா மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 481 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான போட்டியில், சுஜித், ஸ்ரீநிதி ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளியின் ஆசிரியர்கள், சுந்தரேஸ்வரன், ராஜலட்சுமி, ஜெயராஜ், சுகன்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X