பதிவான ஓட்டுகளை எண்ணுவதில் முறைகேடு: காங்., குற்றச்சாட்டு

Added : ஜன 08, 2020
Advertisement

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் 9 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பதிவான ஓட்டுக்களை எண்ணுவதி்ல் முறைகேடு நடந்ததாக காங்., கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க, சார்பில் நவஜோதி என்பவரும் காங்., சார்பில் அனுசியா தேவியும் போட்டியிட்டனர். தேர்தலில் 35,532 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ஜன.2ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் அ.தி.மு.க.,வேட்பாளர் நவஜோதி 1742 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் குருநாதன் அறிவித்தார்.

ஆனால் அரசு இணையதளத்தில் 26,884 ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த பதிவான ஓட்டுகளை விட 8,648 வாக்குகள் கணக்கில் வரவில்லை என்று காங்., கட்சியினர் ரெங்கநாதன் தலைமையில் முதுகுளத்துார் ஆணையாளர் சாவித்திரியிடம் புகார் அளித்தனர்.

தேர்தல் ஆவணங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையான விவரம் கிடைத்தவுடன் வழங்கப்படும் என்று ஆணையாளர் கூறினார்.இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் கணேசனிடம் கேட்டபோது, வார்டு வாரியான ஓட்டுப்பதிவு விவரம், இல்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X