பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்தது! ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குற்றங்கள்...கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதால் பலன்

Added : ஜன 08, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் 529 சி.சி.டி.வி., கேமராக்களும், தனியார் சார்பில்2,964 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால், மாவட்டங்களில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தினந்தோறும் அடிதடி, தகராறு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்தன.இதில், பெரும்பாலும், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை துப்பறிய, மாவட்ட காவல் துறையினர் மோப்ப நாயின் உதவியோடு, கைரேகை நிபுணர்கள் சேகரித்து தரும் தடயங்களைக் கொண்டும் குற்றவாளிகளின் விபரங்களை துப்பு துலக்கி வந்தனர்.இந்த சூழலில், மர்ம நபர்கள் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த அறிவியல் ரீதியான ஓட்டத்திற்கு, போலீஸ் மோப்ப நாயால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் மர்ம நபர்கள், தொடர்ந்து முகமூடி கொள்ளை, வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இது போன்ற சூழலில் தான், முதற்கட்டமாக மாவட்ட காவல் துறை சார்பில் வங்கிகள், நிதி சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களை வைக்கும் பணிகளை துவக்கினர்.இதையறிந்த மர்ம நபர்கள் பெரும்பாலும், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு, வசதி படைத்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசையை காண்பிக்க துவங்கினர்.அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களை வைக்கும் பணிகளை துவக்கினர்.
இதில், மாவட்டத்தில் பல இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அனைத்து இடங்களிலும் கேமராக்களை பொருத்துவதற்கு காவல் துறை நிர்வாகத்திடம் போதிய நிதியில்லை.இதையொட்டி, பெரிய தொழிலதிபர்கள், சமூக நல அமைப்புகள் ஆகியோரின் உதவியை காவல் துறையினர் நாடினர். அதையொட்டி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு சார்பிலும், தனியார் சார்பில் ஆங்காங்கே சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு அறை வைக்கப்பட்டு முழுவதும் தொடர்ந்து பதிவு செய்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் விரைவாக கண்டறியப்பட்டு, குற்ற வாளிகளை போலீசார் கைது செய்து வருகின் றனர்.
இதில், விழுப்புரம் உட்கோட்டத்தில் அரசு சார்பில் 214 கண்காணிப்பு கேமராக்களும், தனியார் சார்பில் 592 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல், திண்டிவனத்தில் அரசு சார்பில் 47, தனியார் 511, செஞ்சியில் அரசு சார்பில் 87, தனியார் 367, திருக்கோவிலுாரில் அரசு சார்பில் 35, தனியார் 262, கோட்டக்குப்பத்தில் அரசு சார்பில் 18, தனியார் 226, கள்ளக்குறிச்சியில் அரசு சார்பில் 94, தனியார் 845, உளுந்துார்பேட்டையில் அரசு சார்பில் 34, தனியார் 161 உட்பட மொத்தம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு சார்பில் 529 சி.சி.டி.வி., கேமராக் களும், தனியார் சார்பில் 2,964 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
காவல் துறையின் விழிப்புணர்வையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பலர் வீடுகள் மற்றும் தங்களின் அலுவலகங்களிலும் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத் தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில், குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X