மருத்துவ சான்று இழுத்தடிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர்:அரசு மருத்துவமனையில், மருத்துவச் சான்றிதழ் வழங்க இழுத்தடிக்கப்பட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, பஸ் கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்காக, அரசு டாக்டர்களிடம் உடல் ஊன சதவீதம் குறித்த மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டையை பெற வேண்டும்.திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், இதற்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை, டாக்டரிடம் சான்றிதழ் பெற நேரம் வழங்கப்பட்டுள்ளது.நேற்று காலை, சான்று பெறுவதற்காக, 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், சான்றில், கையொப்பம் இட வேண்டிய டாக்டர்கள் அங்கு இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்தனர்.எனினும், எவரும் சரிவர பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், மருத்துவப் பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்த வந்த மருத்துவ அலுவலர்கள், அவர்களை சமாதானம் செய்தனர். மருத்துவமனை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி, சான்றில் கையொப்பம் இட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X