பொது செய்தி

தமிழ்நாடு

சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஜன 08, 2020
Advertisement

மரக்காணம்:மரக்காணம் அடுத்த அசப்பூர் கிராமத்தில் சுடுகாட்டுப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அசப்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாட்டுப் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால் அந்த கிராமத்தில் யாராவது இறந்து விட்டால் சடலத்தை விவசாய நிலம் வழியாக துாக்கிச் சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.இந்நிலையில், கலெக்டர் அண்ணாதுரை, அசப்பூர் கிராமத்தில் சுடுகாட்டுபாதை ஆக்கிரமிப்பை உடனே அகற்றவேண்டும் என உத்தரவு பிரப்பித்தார்.
அதன்படி பின் நேற்று மரக்காணம் தாசில்தார் ஞானம் தலைமையில் வருவாய்த் துறையினர் சுடுகாட்டு பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையில் கிராவல் மண் கொட்டி தற்காலிக பாதை அமைத்தனர்.அப்பகுதி மக்கள் நிரந்தர பாதை அமைக்குமாறு வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X