கால்பந்து லீக் போட்டி பல்லடம் அணி வெற்றி 

Added : ஜன 08, 2020
Share
Advertisement

பல்லடம்:திருப்பூர் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், காலபந்து லீக் போட்டிகள், கடந்த ஒரு மாதமாக, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடந்து வருகின்றன.மாவட்ட அளவில், 22 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. பல்லடம் அரசு ஆண்கள் பள்ளியில், லீக் சுற்று போட்டிகள் நடந்தது. திருப்பூர் கன்னர்ஸ் அணியுடன், திருப்பூர் டி.எஸ்.எஸ்., அணி விளையாடிய போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. திருப்பூர் ஜூனியர்ஸ் அணி, 4-0 என்ற கோல் கணக்கில், திருப்பூர் கால்பந்து கழக அணியை வீழ்த்தியது. பல்லடம் கால்பந்து கழக அணி, 4-1 என்ற கோல் கணக்கில், திருப்பூர் யுனிவர்சல் அணியை வென்றது. வெற்ற பெற்ற அணிக்கு, பல்லடம் கால்பந்து கழக நிர்வாகிகள், பரிசுகள், கோப்பைகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X