பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவரான 'கோடாங்கி'

Added : ஜன 08, 2020
Advertisement
 ஊராட்சி தலைவரான 'கோடாங்கி'

திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சியில்புதிய ஊராட்சி தலைவராக அரிவாள் மீது நின்று குறி சொல்லும் தி.மு.க.,வை சேர்ந்த கோடாங்கி ஒருவர் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளார்.

காஞ்சிரங்குடி அருகே கஸ்துாரிபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி 49. கடந்த 15 ஆண்டுகளாக தன்னை நாடி வரும் மக்களுக்கு கோடாங்கி உடுக்கை அடித்தல், அரிவாள் மீது நின்று குறி சொல்லுதல், பரிகார பூஜைகள் செய்து வருகிறார். தி.மு.க., உறுப்பினரான இவர் காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவராகி உள்ளார்.

முனியசாமி கூறியதாவது:எங்கள் பகுதியில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய, பொது நல அமைப்புகளுக்கும் வேண்டிய உதவிகளை செய்து வருகிறேன். தற்போது நடந்த தேர்தலில் 649 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். காஞ்சிரங்குடி ஊராட்சி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், பொது சேவையில் ஈடுபடவும்ஆரம்பத்தில் இருந்து மனது விரும்பியது.

அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் 3 அடி நீள அரிவாள் மேல் நின்றுஅருள் வாக்கு சொல்கிறேன். வடமாடு, மஞ்சு விரட்டிற்கான மூன்று காளைகளை வளர்த்து வருகிறேன். ஊராட்சி மக்கள் எந்நேரமும் என்னை சந்தித்து குறைகளை முறையிடலாம். மக்கள் பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X