பொது செய்தி

தமிழ்நாடு

கிராம நூலகத்துக்கு எதற்கு பூட்டு?

Added : ஜன 08, 2020
Advertisement
 கிராம நூலகத்துக்கு எதற்கு பூட்டு?

அவிநாசி:'மூடிக்கிடக்கும் நுாலகத்தை திறந்து வையுங்க' என, புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி தலைவரிடம் பள்ளி மாணவி, முதல் மனுவை வழங்கினார்.அவிநாசி அருகேயுள்ள புதுப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவராக கஸ்துாரிபிரியா, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். பதவியேற்பு விழா முடிந்த பின், அவிநாசியிலுள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும், அப்பகுதியை சேர்ந்த பரணி என்ற சிறுமி, மாணவ, மாணவியர் சார்பில், ஊராட்சி தலைவரிடம் ஒரு மனு அளித்தார்.அதில், 'நமது ஊராட்சி, அவிநாசியில் இருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கிறது. பெண் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர் புத்தகங்கள் படித்து, பொது அறிவை வளர்த்துக் கொள்ள நுாலகம் அவசியம். நமது ஊராட்சியில் கட்டப்பட்ட நுாலக கட்டடம் பயனற்று, பூட்டிக்கிடக்கிறது. தங்களின் முதல் பணியாக, இந்த நுாலகத்தை, பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் திறந்து வைக்க வேண்டும், ' என கூறியிருந்தார்.மனுவை பெற்று கொண்ட ஊராட்சி தலைவர், 'நுாலக்தை திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக,' உறுதியளித்தார். கடந்த, 10 ஆண்டுக்கு முன், 4.15 லட்சம் ரூபாய் செலவில் நுாலக கட்டடம் கட்டப்பட்டது. காலப்போக்கில், பயன்படுத்தப்படாமல், குடோனாக மாறி விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X