பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம், மண்டபத்தில்33 கவுன்சிலர்கள் பதவியேற்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் கரிகாலன், உலக ராணி, மனோகரன், கல்பனா தேவி, பூமிநாதன், ராஜவேணி, பிரபாகரன், மற்றும் காங்., சீனி இபுராகிம் அம்மாள் ஆகிய 8 பேர் தி.மு.க., கூட்டணியிலும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜ்குமார், மாணிக்க சாரதி, அசோக்குமார் மற்றும் தே.மு.தி.க.,வை சார்ந்த முனீஸ்வரி ஆகிய 4 பேரும் தேர்தல் அலுவலர் கண்ணன், ஒன்றிய ஆணையாளர் அப்துல்ஜப்பார் முன்னிலையில் பதவியேற்றனர்.

உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர். தி.மு.க., கவுன்சிலர்கள் பகவதிலட்சுமி, சுப்புலட்சுமி, ஆறுமுகம், காளீஸ்வரி, பேச்சியம்மாள், சுகந்தி, முத்துசெல்வம், லெட்சுமி, உஷா லெட்சுமி மற்றும் காங்., மாரியம்மாள், சி.பி.ஐ., டிரோஸ் என 12 பேர் தி.மு.க., கூட்டணியில் பதவி ஏற்றனர்.மருதுபாண்டியன், நித்யா, பாதம்பிரியாள், அலெக்ஸ் மற்றும் பா.ஜ., முருகன் என அ.தி.மு.க., கூட்டணியில் ஐந்து பேரும், சுயேச்சைகளாக அஜ்மல் சரிபு, பேரின்பம், கண்ணன் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவகப்பெருமாள், ராஜேந்திரன் முன்னிலையில் பதவியேற்றனர்.

மண்டபம் ஒன்றியம் 8 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சபியா ராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ராமநாதபுரம் ஒன்றியத்தில் 25 ஊராட்சி தலைவர்களும், 368 வார்டு உறுப்பினர் களும், மண்டபம் ஒன்றியத்தில் 28 ஊராட்சி தலைவர்களும் 601 வார்டு உறுப்பினர்களும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பதவியேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X