பொது செய்தி

தமிழ்நாடு

உணவு தரச் சட்டம்: மீறினால் அபராதம்

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர்:உணவு தர நிர்ணய சட்டப்படி, 12 லட்சத்துக்கும் கீழ் உணவு வணிகம் செய்பவர்கள், அதற்கான விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால், உணவு பாதுகாப்பு நியமன அலுவலரே அபராதம் விதிக்கலாம். அதன்படி, தொடர்ந்து, மூன்றாவது முறை குற்றம் கண்டறியப்பட்டால், பதிவுச் சான்று ரத்து செய்யப்படவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.சிறு மற்றும் குறு உணவு தயாரிப்பாளர்களிடம், முதல் முறையாக குற்றம் கண்டறியப்பட்டால், அபராதத் தொகையாக, 3 ஆயிரம்; 2 வது முறை குற்றத்திற்கு, 6 ஆயிரம் ரூபாய்; 3ம் முறை குற்றத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பதிவுச் சான்று ரத்து.l சிறு மளிகைக் கடைகள், நடமாடும் உணவு வணிகர்கள், தற்காலிக கடை நடத்துபவர்களுக்கு, முதல் முறையாக இருந்தால், ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை, 2 ஆயிரம் ரூபாய்; 3 வது முறை, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பதிவுச் சான்று ரத்து.l500 லி., மேல் பால் விற்பனை செய்பவர்கள், இறைச்சிக் கடைக்காரர்கள், அனுமதியற்ற பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்களை பொட்டலமிடுபவர்களுக்கு, முறையே, 2 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பதிவுச் சான்று ரத்து.l பதிவுச் சான்று பெறாமல் உணவு வணிகம் செய்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம்.l தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் செய்தித்தாளில் பொட்டலமிட்டால், முறையே, 5 ஆயிரம்; 10 ஆயிரம் ரூபாய்; 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பதிவு உரிமம் ரத்து செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X