சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தின் மீது கார் மோதல்

Added : ஜன 08, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:மரத்தில் கார் மோதி கணவன், மனைவி காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த, சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 45; இவரது மனைவி யசோதா. இருவரும் கடந்த 5ம் தேதி இன்டிகா காரில் நைனார்பாளையத்தில் இருந்து அரசங்குடி வழியாக சென்று கொண்டிருந்தனர்.செம்பாக்குறிச்சி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மான் ஓடியதால், அதன் மீது மோதமல் இருக்க மணிகண்டன் காரை வலது புறமாக திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்த மணிகண்டன், யசோதை இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X