சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கிய நிலையில் முதியவர் மீட்பு

Added : ஜன 08, 2020
Advertisement

பொங்கலுார்:பல்லடம் தாராபுரம் ரோடு பொங்கலுார் கள்ளிப்பாளையம் அருகே, ரோட்டோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை அவ்வழியே சென்றவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரிடம் விசாரித்ததில், பெயர் கனகராஜ், 66, அப்பா சின்னசாமி நாயுடு, மனைவி கிருஷ்ணவேணி, மகள் நித்யா, 36 பல்லடம் என்று கூறியுள்ளார்.அதற்குமேல் அவருடைய முழு முகவரியைக் சொல்ல முடியவில்லை. இதனால், போலீசார் அவரை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X