பொது செய்தி

தமிழ்நாடு

கடத்தப்பட்ட தி.மு.க.,கவுன்சிலர் மீட்பு: உயர்நீதிமன்றத்தில் தகவல்

Added : ஜன 08, 2020
Advertisement

மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர் வாசுகி கடத்தப்பட்டதாக தாக்கலான வழக்கில், அவர் மீட்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலாடி அருகே டி.கரிசல்குளம் சின்னமணி தாக்கல் செய்த மனு:எனது மனைவி வாசுகி கடலாடி ஒன்றியம் 18 வது வார்டில் தி.மு.க.,சார்பில் வெற்றி பெற்றார். ஆப்பனுார் அ.தி.மு.க., நிர்வாகி முனியசாமி பாண்டியன் மகளை ஊராட்சி ஒன்றிய தலைவராக்க முனியசாமி பாண்டியன் முயற்சி செய்கிறார்.

ஜன.,3ல் நானும், மனைவியும் சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தோம். காரில் வந்த முனியசாமி பாண்டியன், வாசுகியை கடத்தினர். தலைவர் தேர்தலில் வாசுகி ஓட்டளிப்பதை தடுக்க இவ்வாறு செய்துள்ளார். வாசுகியை மீட்க போலீசில் முறையிட்டேன். அவரை மீட்கும் வரை தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு சின்னமணி மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.அரசுத்தரப்பில், 'வாசுகி மீட்கப்பட்டு மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பிப்.,3 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X