பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைவால் விலை 'கிடுகிடு'; விவசாயிகள் திருப்தி

Added : ஜன 08, 2020
Advertisement
 வரத்து குறைவால் விலை 'கிடுகிடு'; விவசாயிகள் திருப்தி

அவிநாசி:சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், திங்கள் தோறும் நிலக்கடலை ஏலம் நடக்கிறது. பொதுவாக, செப்., - டிச., மாதம், நிலக்கடலை சீசன் களைகட்டும்.நடப்பு நிதியாண்டில், 2019, மார்ச் துவங்கி, வரும், 2020 ஏப்., வரை, 4,300 டன் விற்பனை மற்றும், 15 கோடி ரூபாய் வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதியாண்டின் சீசன் முடிந்துள்ள நிலையில் இதுவரை, 1,800 டன் நிலக்கடலை மட்டுமே விற்கப்பட்டுள்ளது; ஆனால், 10 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ளது.கடந்த, செப்., அக்., மாதம், வழக்கமாக பெய்ய வேண்டிய மழை பொய்த்ததால், நிலக்கடலை மகசூல் வெகுவாக குறைந்தது. அத்துடன், கடந்தாண்டு நிலக்கடலை மகசூலால் பெரியளவில் வருமானம் கிடைக்காத நிலையில், பெரும்பாலான விவசாயிகள், நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடவில்லை. இந்தாண்டு சீசனில், 980 விவசாயிகள் மட்டுமே, ஏலத்திற்கு, நிலக்கடலை எடுத்து வந்தனர்.இதனால், சந்தையில் கிராக்கி ஏற்பட்டு, வியாபாரிகள் போட்டி, போட்டு கொள்முதல் செய்தனர். அதன் விளைவாக, 1கிலோ நிலக்கடலையின் சராசரி விலை, 55 - 60 ரூபாயாகவும், அதிகபட்ச விலை, 75 ரூபாயாகவும் இருந்தது; வர்த்தக மதிப்பும், 10 கோடி ரூபாயை தாண்டியது.எனவே, நிலக்கடலை வரத்து பாதியாக குறைந்திருப்பினும், சந்தையில் ஏற்பட்ட கிராக்கியால் விலை உயர்ந்தது; விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X