தெருவிளக்கு எரிவதில்லை

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர், காங்கயம் ரோடு, நொய்யல் ரோட்டை அடுத்த எம்.சி.ஏ., நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. விளக்குளை சீரமைக்க வேண்டும்.-ஆர். லட்சுமி, காங்கயம் ரோடு.போலீசார் கவனத்துக்கு...திருப்பூர், கல்லாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நாள்தோறும் நடக்கிறது. போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பது இல்லை.-ஏ.ராஜராம், கல்லாங்காடு.மாநகராட்சி கவனத்துக்கு1. திருப்பூர், சூசையாபுரம் மேற்கு, பாளையக்காடு மாரியம்மன் கோவில் அருகே திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். கடும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.-எஸ்.கருப்புசாமி, சூசையாபுரம்.2. திருப்பூர், காங்கயம் ரோடு - சி.டி.சி., டிப்போ இணைப்பு சாலை வளைவில் குப்பை தொட்டி வைத்துள்ளனர். வளைவில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை.-டி.செல்லத்துரை, காங்கயம் ரோடு.வீணாகும் குடிநீர்திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலம் அருகே குழாய் உடைத்து, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிறது. உடைந்துள்ள குழாய்களை சரிசெய்ய வேண்டும்.-ஜி.ராமச்சந்திரன், கே.பி.என்., காலனி.ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் முன்புறம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். கடைகள், தாறுமாறாக நிறுத்தப்படும் வானங்களால் நெரிசல் ஏற்படுகிறது.-ஏ.வேலுச்சாமி, பி.என்., ரோடு.சாலையை சீரமைக்கலாமே!திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் இருந்து அணைக்காடு செல்லும் ரோடு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டி சரிவர மூடவில்லை. சாலை முழுவதும் மண் செருமி வாகன ஓட்டிகள் சென்று வர முடியாதபடி உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.- ஏ.சிவசங்கர், அணைக்காடு.தெருவிளக்கு எரிவதில்லை1. திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, பறக்கும் பாலத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு அமைக்க வேண்டும்.- என்.சந்திரன், திருப்பூர்.2. அவிநாசி, ராயம்பாளையம் தெற்கு வீதியில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- என்.லிங்குசாமி, ராயம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X