பொது செய்தி

தமிழ்நாடு

மண் கடத்திய லாரிகள்: நடவடிக்கை எடுக்க தாசில்தார் பரிந்துரை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

அவிநாசி:'அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.அவிநாசி அருகே சேவூர் - சந்தைப்பாளையம், கால்நடை மருத்துவமனை ரோட்டில், அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்ததாக, நான்கு லாரிகளை, தாசில்தார் சாந்தி, பறிமுதல் செய்தார்.இதுகுறித்து, அவிநாசி ஜே.எம்.கோர்ட்டில் அவர் அளித்துள்ள புகார் விவரம்:கடந்த, 3ம் தேதி, அவிநாசி - நம்பியூர் ரோட்டில், வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, நான்கு டிப்பர் லாரிகளில், உரிய ஆவணமின்றி, கிராவல் மண் எடுத்து வருவது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.இதில், இரு லாரிகள், தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரு லாரிகளில், டிரைவர் இல்லாததாலும், வாகனத்தில் சாவி இல்லாததாலும், அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட இரு லாரிகளின் டிரைவர்கள் பிச்சைமணி, நல்லுசாமி என்பது தெரியவந்தது.இந்த வாகனங்கள், ஈரோடு மாவட்டம், நம்பியூர், வேமாண்டம்பாளையம் கிராமம், மீன்காரன்பாளையம் என்ற இடத்தில் இருந்து, மண் ஏற்றி வருவதாக தெரிந்தது. ஆனால், அனுமதி சீட்டில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலுார் பகுதியில் இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, உரிய அனுமதி பெறாமல், கள்ளத்தனமாக மண் ஏற்றி வந்த இந்த நான்கு லாரிகள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேவூர் போலீசாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தாசில்தார் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X