பொது செய்தி

தமிழ்நாடு

புதிய குடிநீர் திட்டப்பணி 'விறுவிறு'

Added : ஜன 08, 2020
Advertisement
 புதிய குடிநீர் திட்டப்பணி 'விறுவிறு'

அவிநாசி:அவிநாசி வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் புதிய குடிநீர் திட்டப்பணி வேகமெடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், வேடர் காலனி படித்துறை என்ற இடத்தில் இருந்து, சுமைதாங்கி என்ற இடத்திற்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.அங்கிருந்து, குடிநீர் எடுக்கப்பட்டு, அன்னுார், அவிநாசி, மோப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலுார் விமானப்படை தளம், திருப்பூர் மற்றும் பல்லடம் ஒன்றியங்களில் உள்ள, 155 குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்க, 241 கோடி ரூபாய் செலவில், பணிகள் நடந்து வருகிறது.திட்டத்தின் படி, அவிநாசி பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, சேவூர் வழியாக அவிநாசி கைகாட்டிபுதுாரில் உள்ள வார சந்தையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அங்கு சேமித்து வைக்கப்பட உள்ளது. அங்கிருந்து, நகர பகுதிக்கு, நீர் வினியோகிக்கப்படும்.இதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ரோட்டில் குழாய் பதிக்க பெரிய குழாய்கள் வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X