பொது செய்தி

தமிழ்நாடு

'நான் என்ற மனநிலை மறைய வேண்டும்!' மார்கழி சொற்பொழிவில் கருத்து

Added : ஜன 08, 2020
Advertisement

அவிநாசி:''மகிழ்ச்சியாக இருக்கும் போதும், பகவானை நினைக்க வேண்டும்,'' என, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில் நடந்து வரும் மார்கழி உபன்யாசத்தில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:நமக்கு, துன்பம் வரும்போது தான், பகவானை அதிகம் நினைப்போம். அதே நேரம், மகிழ்ச்சியான நேரத்திலும், பகவானை நினைக்க வேண்டும். கம்பராமாயணம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இறைவன் தான், சகல ஜீவராசிகளையும் காப்பாற்றுகிறார்.உறக்கத்தின் போது, நமக்கு எதுவுமே தெரியாது; எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, உறங்க செல்லும் முன், பகவான் நாமம் சொல்வது நல்லது. ஒவ்வொருவர் மனதிலும், நான் என்ற மனநிலை மறைய வேண்டும்; என்னால் தான், அனைத்தும் நடந்தது என்ற எண்ணம் இருக்கக் கூடாது.எந்தவொரு பணியை செய்யவும், பலரும் தயராக தான் உள்ளனர்.குறிப்பிட்ட ஒருவர் இல்லாமல் போனால், அந்த செயல் நடக்காது என்பதல்ல; அவருக்கு நிகரான அல்லது, அவரை விட திறமைசாலியால் அந்த பணி நடந்தே தீரும். எனவே, நான் என்ற அகம்பாவம் இருக்கக்கூடாது. மாறாக, நாம் என்ற மனநிலை வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X