பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு மாறுதல் பெற வற்புறுத்தல்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குமுறல்

Added : ஜன 08, 2020
Advertisement
 கேரளாவுக்கு மாறுதல் பெற வற்புறுத்தல்: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குமுறல்

திருப்பூர்:தமிழகத்தில் பணிபுரியும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள மருத்துவ மற்றும் முதலுதவி செய்யும் தொழில்நுட்ப பணியாளர்களை, கேரளாவுக்கு, பணியிட மாறுதல் பெற்று செல்ல, வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவையை, சுகாதாரத்துறையும், ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., என்ற தனியார் நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன. டிரைவர்கள், அவசர கால மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள், முதலுதவி செய்யும் தொழில்நுட்ப நிபுணர்கள், அழைப்புகளுக்கு பதிலளிக்கும் தொழிலாளர்கள் என ஏறத்தாழ, 4,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.இச்சூழலில், மருத்துவ மற்றும் முதலுதவி செய்யும் தொழில்நுட்ப பணியாளர்கள், கேரளா மாநிலத்துக்கு, பணியிட மாறுதல் பெற்று செல்ல, வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு, பணியிட மாறுதல் பெற்றுச் செல்ல மறுப்பு தெரிவித்தால், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை, இயக்காமல் நிறுத்தி வைப்பதும் தெரிய வந்துள்ளது.இது குறித்து, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் கூறுகையில், 'பணி நியமனம் செய்யப்படும்போது, தமிழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் மாறுதல் செய்யலாம் என்றே ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, தனியார் நிறுவனத்தின் சேவை, கேரளாவிலும் துவக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்துக்கு செல்ல வற்புறுத்துகின்றனர். எதிர்ப்பு தெரிவித்தால், ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க அனுமதிப்பதில்லை,' என்றனர்.இந்த விவகாரம் குறித்து, திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி கூறுகையில், ''கேரளாவில் சென்று தற்காலிகமாக பணிபுரியுமாறு மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து, சென்னையிலுள்ள, 108 ஆம்புலன்ஸ் தலைமையக நிர்வாகிகள்தான் இறுதியாக முடிவெடுப்பர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X