பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம்: பஸ் ஸ்டாண்ட் மூன்றாக பிரிப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர்:பொங்கல் சிறப்பு பஸ் இயக்க வசதியாக, புது பஸ் ஸ்டாண்டை மீண்டும் மூன்றாக பிரிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. வரும், 11ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பண்டிகையின் போது திருப்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ் இயக்குவதால், பஸ் ஸ்டாண்ட் களைகட்டுகிறது. ஒரே நாளில், 80 ஆயிரம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். பண்டிகைகளின் போது சிறப்பு பஸ்களை பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள மைதானத்தில் நிறுத்துவது வழக்கம்.தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது. சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ்களை நிறுத்த முடியாது. கூடுதல் பஸ் இயக்கும் போது பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் நிறுத்த இடையூறு ஏற்படும். பயணிகளுக்கும் சிரமம்.இதனால், பொங்கல் பண்டிகைக்கு, பயணிகள் நெரிசலை தவிர்க்க, தீபாவளியின் போது மேற்கொள்ளப்பட்டதை போன்று, தற்போதும், பஸ் ஸ்டாண்ட் மூன்றாக பிரிக்கப்படுகிறது.இதனால் ஏற்படும் போக்குவரத்து மாற்றம் குறித்து போக்குவரத்து போலீஸ் கமிஷனர் கஜேந்திரன் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ், வரும், 11ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப, பஸ் ஸ்டாண்ட் பிரிக்கப்படுகிறது.அதன்படி திருச்சி, கரூர் வழியே செல்லும் பஸ்கள் வடக்கு உழவர் சந்தை அருகே உள்ள காலியிடத்தில் நிறுத்தப்படும். மேட்டுப்பாளையம், கோவை, சத்தி, அவிநாசி ரோடு வழியாக செல்லும் பஸ்கள், அவிநாசி ரோட்டிலுள்ள பிஷப் ஸ்கூல் எதிரில் உள்ள கதர்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படும்.மதுரை, தேனி, கம்பம், நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் மட்டும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுமென, போக்கு வரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X