பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வாக்காளர் தின ஓவியப்போட்டி

Added : ஜன 08, 2020
Advertisement
 தேசிய வாக்காளர் தின ஓவியப்போட்டி

திருப்பூர்:தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளருக்கான திருவிழாவின் ஒரு பகுதியாக, கல்லுாரிகளில் நேற்று, ஓவியப்போட்டி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு என்ற தலைப்பில், கல்லுாரிகளுக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது.வாக்காளர் பதிவு அலுவலர் முன்னிலையில், ஓவியப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் கல்லுாரியில் நடந்த ஓவியப்போட்டியை, கலெக்டர் விஜய கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு, மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.ஆய்வின் போது, ஆர்.டி.ஓ., கவிதா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், தெற்கு தாசில்தார் மகேஸ்வரன் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் உடனிருந்தனர்.கல்லுாரி வாரியாக நடக்கும் போட்டியில் வரைந்த ஓவியங்கள், தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.அதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்களுக்கு, சென்னையில் நடக்கும் மாநில அளவிலான, தேசிய வாக்காளர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுமென, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X