கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கவுன்சிலரை ஆஜர்படுத்த உத்தரவு

Added : ஜன 08, 2020
Advertisement

மதுரை:மாயமான ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரை இன்று ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்துார் வதியனேந்தல் ராஜா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது தந்தை சாத்தையா. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டில் தி.மு.க.,சார்பில் வென்றார். ஜன.,3 ல் மாயமானார். அவரை சிலர் சட்ட விரோதமாக தடுத்து வைத்துள்ளனர். எனது தந்தையை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், 'ஒன்றிய தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் மனுதாரர் மற்றும் அவரது தந்தை இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சாத்தையாவை யாரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கவில்லை,' என தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் தந்தையை இன்று (ஜன.,8) ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X