விவேகம் பள்ளியில் விளையாட்டு விழா

Added : ஜன 08, 2020
Advertisement
 விவேகம் பள்ளியில் விளையாட்டு விழா

திருப்பூர்:தாராபுரம், விவேகம் பிரைம் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.பள்ளி முதல்வர் கோகிலா வரவேற்றார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ராமகிருஷ்ணன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி தாளாளர் சுப்ரமணியன், இயக்குனர் நடராஜன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.குழந்தைகள் தங்கள் திறமைகளை அரங்கேற்றிய விதம் பாராட்டுக்குரியது எனக்கூறிய ராமகிருஷ்ணன், 'குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,' என அறிவுறுத்தினார். மாணவர்களின் பிரமிடு பார்வையாளர்களை கவர்ந்தது. பெற்றோருக்கு விளையாட்டு போட்டி நடத்தி வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X