பொது செய்தி

தமிழ்நாடு

வரும், 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 2.27 லட்சம் குழந்தைகள் இலக்கு

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 1,154 மையங்கள் அமைக்கப்பட்டு, 2.27 லட்சம் குழந்தைகளுக்கு, வரும் 19ம் தேதி, போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில், நாடு முழுவதும் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதால், நோய் பரப்பும் வைரஸ் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வரும், 19ம் தேதி ஒரே தவணையாக நடத்தப்படுகிறது.இதற்கென, மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், 1,154 மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தவிர, 26 நடமாடும் குழுக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில், 23 மையங்கள் அமைக்கப்பட்டு, சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில், 2 லட்சத்து, 27 ஆயிரம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'இடம் பெயர்ந்தோர், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தொலைவில் மற்றும் ரோட்டோரங்களில் வசிப்போர் ஆகியோரின் நலன் கருதி, நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும், நான்கு பணியாளர்கள் வீதம், 4,922 பணியாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களது, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க பெற்றோர் முன்வர வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X