பொது செய்தி

தமிழ்நாடு

பாதி சம்பளம் கிடைத்தது: பணிக்கு திரும்பிய ஊழியர்கள்

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர்:இரண்டு மாதம் சம்பளம் வழங்கப்படாததால், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட துப் புரவு ஊழியர்கள் நேற்று பணிக்குத் திரும்பினர்.திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், இரு மண்டலங்களில் உள்ள 30 வார்டுகளில், தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணி கடந்த பல ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 800 ஊழியர்கள், தினக்கூலி அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர்.கடந்த இரு மாதமாக இந்நிறுவனம் இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. சம்பளத்தை வழங்க கோரி துப்புரவு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், நிறுவன அலுவலர்கள் அவர்களை சமாளித்து பணிகளை தொடர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.பொறுமையிழந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், நகரின் பல பகுதிகளில் நேற்று குப்பை அகற்றுதல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டன.சி.ஐ.டி.யு., துப்புரவு ஊழியர் சங்க நிர்வாகி ரங்கராஜ் தலைமையில் ஏராளமான ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும். அப்போது தான் மீண்டும் பணிக்குத் திரும்புவோம் என்றனர்.நிலுவையில் உள்ள ஒரு மாத சம்பளம் ஊழியர்களுக்கு வழங்கப்பட் டது. மீத சம்பளம் வரும் 10ம் தேதிக்குள் வழங்கப்படும் என உறுதியளிக்கப் பட்டது. இதனால், ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, நேற்றுகாலை வழக்கம்போல் பணிக்குத் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X