தமிழ்நாடு

சோதைனை: அறுவடை நேரத்தில் நெற்பயிர் மூழ்கியதால் மழையால் விளைந்து மழையாலேயே விரயமானது

Added : ஜன 08, 2020
Advertisement
சோதைனை: அறுவடை நேரத்தில்  நெற்பயிர் மூழ்கியதால் மழையால் விளைந்து மழையாலேயே விரயமானது

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் அறுவடை நேரத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.இம்மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக பெய்த பருவமழையால் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

பெரும்பாலான பயிர்கள் வளர்ந்து சில இடங்களில் அறுவடைப்பணி துவங்கி விட்டது. இந்நிலையில் வானிலை மாற்றம் காரணமாக கடந்த திங்கட்கிழமை மாலை சிங்கம்புணரி ஒன்றியத்தில் முதலியான்பட்டி, வையாபுரிபட்டி, எஸ்.எஸ்.கோட்டை, மு.சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், திருப்புத்துார் ஒன்றியத்தில் சுண்ணாம்பிருப்பு, கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இப்பகுதி கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை வரை மழை விட்டுவிட்டு பெய்த நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டது.சில இடங்களில் பல மணி நேரம் தண்ணீருக்குள் கிடந்ததால் பயிர்கள் அழுகிவிட்டன.

பல வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு போதிய மழை காரணமாக விவசாயம் செழித்துள்ள நிலையில் வரும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட விவசாயிகள் ஆர்வமுடன் இருந்தனர். கடந்த மூன்று நாட்களாக பெய்யும் மழை அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தேவகி, முதலியான்பட்டி: இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் இரண்டரை ஏக்கரில் நெல் பயிரிட்டேன். பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அறுவடை இயந்திரத்துக்காக இரண்டு நாட்கள் தள்ளிப்போன நிலையில் மழை வந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டது. விட்டுவிட்டு பெய்தாலும் கனமழையாக பெய்ததால் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது. இந்தாண்டு பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட இருந்தோம், இயற்கை வஞ்சித்துவிட்டது.

பழனிமுத்து, முதலியான்பட்டி: இப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது. அரசு உரிய நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். இப்பகுதிக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார். இந்நிலையில் மாவட்டத்தில் மேலும் சில இடங்களிலும் மழை தொடர்வதால் அறுவடைக்கு தயாராகிவரும் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X