சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி பெண் தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை

Added : ஜன 08, 2020
Advertisement
 கர்ப்பிணி பெண் தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை

திண்டிவனம்:திண்டிவனத்தில், கர்ப்பிணி பெண் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி அம்சா, 40; இவரது மகள் அன்பரசி, 19; வடிவேல் இறந்து விட்டதால், அம்சா சேதராப்பட்டில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில், அன்பரசிக்கும், திண்டிவனம் பூதேரியைச் சேர்ந்த ஏழுமலை மகன் விமல்ராஜ், 33; என்பவருக்கும், கடந்த ஆண்டு மே 8ம் தேதி மயிலம் முருகர் கோவிலில் திருமணம்நடந்தது.காய்கறி வியாபாரம் செய்து வந்த விமல்ராஜ், பூதேரியில், மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். அன்பரசி 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரது தாயார் அம்சா, உடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, ஸ்கேன் எடுப்பதற்கு வருமாறு தனது கணவர் விமல்ராஜிடம், அன்பரசி கூறியுள்ளார். இதற்காக விமல்ராஜ் வீட்டிற்கு வந்த போது போதையில் இருந்ததால், ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேட்டு விமல்ராஜிடம் தகராறு செய்து ஸ்கேன் எடுக்க வர மாட்டேன் என அன்பரசி மறுத்துள்ளார்.இந்த பிரச்னையால், விமல்ராஜ், அதே பகுதியில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், அன்பரசி வீட்டில் தங்கியிருந்த, அம்சா, நேற்று காலை சேதராப்பட்டில் வேலை செய்து வரும் கம்பெனிக்கு சென்று விட்டார்.போதை தெளிந்த பிறகு, விமல்ராஜ், நேற்று காலை 9:00 மணியளவில் மனைவியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து, கதவை உடைத்துக்கொண்டு வந்து பார்த்த போது, அன்பரசி துாக்கு போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அம்சா, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அன்பரசியின் கணவர் விமல்ராஜிடம் விசாரித்து வருகின்றனர்.திருமணமான 8வது மாதத்திலேயே அன்பரசி இறந்ததால் சப் கலெக்டர் விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X