சாலை விபத்தில் பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் பெண் பலி

Added : ஜன 08, 2020

வெள்ளகோவில்:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேஷ். 30. இவர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் காரில் திருநள்ளாறு சென்றுவிட்டு, 5ம் தேதி ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அதில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, வெள்ளகோவில், பச்சாபாளையம் பிரிவு அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியது.இந்த விபத்தில், முருகேசனின் தங்கை முத்துலட்சுமி, 28, படுகாயமடைந்து, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். காரை ஓட்டிய நெகமம், அண்ணா நகரை சேர்ந்த சுகன், 28, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X