விபத்தில் ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் ஒருவர் பலி

Added : ஜன 08, 2020
Share
பொங்கலுார்:விநாசிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் குமார் குப்தா, 35, தீபக் குமார் குப்தா, 31. சகோதரர்கள். இவர்கள் தாராபுரம் அனுமந்தபுரம் என்ற இடத்தில் ஸ்வீட்ஸ் கடை வைத்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, காரில் திருப்பூர் சென்றுவிட்டு தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பொங்கலுார், அவிநாசிபாளையம்

பொங்கலுார்:விநாசிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் குமார் குப்தா, 35, தீபக் குமார் குப்தா, 31. சகோதரர்கள். இவர்கள் தாராபுரம் அனுமந்தபுரம் என்ற இடத்தில் ஸ்வீட்ஸ் கடை வைத்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, காரில் திருப்பூர் சென்றுவிட்டு தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பொங்கலுார், அவிநாசிபாளையம் அருகே சென்றபோது, கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது.இதில், காரில் பயணித்த தீபக் குமார் குப்தா படுகாயம் அடைந்து இறந்து போனார். முகேஷ் குமார் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X