தமிழ்நாடு

பழைய பஸ் ஸ்டாண்ட் முழுதும்... இனி... பளபளக்கும்!'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் 'சுறுசுறு'

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
 பழைய பஸ் ஸ்டாண்ட் முழுதும்... இனி... பளபளக்கும்!'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் 'சுறுசுறு'

திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள், வேகமெடுத்துள்ளன.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. இங்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இச்சூழலில், பஸ் ஸ்டாண்ட், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 54 கோடி ரூபாய் மதிப்பில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, 18.1 கோடி ரூபாயில் அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடமும் கட்டப்படுகிறது.இதற்கான பணிகள் துவங்கி, முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது, பஸ் ஸ்டாண்ட் ஒட்டி, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்பின், தற்போதுள்ள வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் முழுமையாக இடித்து, தரைமட்டமாக்கிய பின், கட்டுமானப்பணியை துவக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்களுடன் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவுள்ளது. அதாவது, பிறைநிலா வடிவில் வளைவாக அமைக்கப்படும் வணிக வளாகத்தை பேருந்துகள் சுற்றிச் செல்லும் வகையில் கட்டப்படும். மின் விளக்கு வசதிகள், கழிப்பறைகள், ஓய்வு இருக்கைகள், பயணிகளுக்கான பொருட்கள் பாதுகாப்பு அறைகள், வாகன நிறுத்துமிடம், நவீன வடிவமைப்பில் நுழைவு வாயில், கண்கவர் அலங்கார விளக்குகளும் ஏற்படுத்தப்படும்.பஸ்கள் வருகை பற்றிய அறிவிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமையும் இடம் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X