சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளை ஒருவழிச்சாலையாக மாற்ற ஆய்வு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
 கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளை ஒருவழிச்சாலையாக மாற்ற ஆய்வு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து மிகுதியான சாலைகளை ஒரு வழிச்சாலையாக மாற்றுவதற்காக எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சியில் மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரில் உள்ள முக்கிய சாலைகள் வாழியாக 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன.ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் நகரைக் கடந்து செல்கிறது. இதனால், எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல்மிகுந்த பகுதியாகவிளங்குகிறது.குறிப்பாக, குறுகிய சாலையான காந்தி சாலை மற்றும் தியாகதுருகம் சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையொட்டி, நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்தும் பொருட்டு, ஒரு வழிச்சாலையாக மாற்றுவதற்காக நேற்று, எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார்.அப்போது, கச்சிராயபாளையம் சாலை மற்றும் தியாகதுருகம் சாலைக்கு மாற்று வழிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, டி.எஸ்.பி., ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X