பொது செய்தி

தமிழ்நாடு

முதலாம் மண்டல பாசன தண்ணீர் திறப்புக்கு அரசுக்கு பரிந்துரை!அடுத்த சுற்றுக்கு தயாராகும் திருமூர்த்தி அணை

Added : ஜன 08, 2020
Advertisement
  முதலாம் மண்டல பாசன தண்ணீர் திறப்புக்கு அரசுக்கு பரிந்துரை!அடுத்த சுற்றுக்கு தயாராகும் திருமூர்த்தி அணை

உடுமலை:பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம், வரும் 9ம் தேதி நிறைவு பெற்று, முதலாம் மண்டல பாசனத்திற்கு, வரும், 24ம் தேதி முதல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, ஐந்து சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்பட்டு, கடந்த, ஆண்டு, ஜூன், 3ல் நிறைவு பெற்றது.தொடர்ந்து, நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, செப்.,25ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில், 135 நாள் மண்டல பாசன காலமாக கொண்டு, சுற்றுக்கு, 1,900 கன அடி வீதம், நான்கு சுற்றுக்களில், 7,600 மில்லியன் கன அடி நீர் வழங்க திட்டமிடப்பட்டது.அதன் அடிப்படையில், நான்கு சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்பட்டு, தற்போது இறுதிச்சுற்றுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும், 9ம் தேதியுடன், நான்காம் சுற்றுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு, நான்காம் மண்டல பாசன காலம் நிறைவு பெறுகிறது.இதனையடுத்து, விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு, வரும், 24ம் தேதி முதல் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.திட்ட தொகுப்பு அணைகளின் நீர்இருப்பு மற்றும் வரத்தை அடிப்படையாகக்கொண்டு, முதல் மண்டல பாசன நிலங்களுக்கும், நான்கு சுற்றுக்கள் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதலாம் மண்டல பாசனத்தின் கீழ், பொள்ளாச்சி தாலுகாவில், 19,781 ஏக்கர் நிலங்களும், சூலுார் தாலுகாவில், 3,020 ஏக்கர், உடுமலை தாலுகாவில், 13,428 ஏக்கர், மடத்துக்குளம் தாலுகாவில், 6,763 ஏக்கர், தாராபுரம் தாலுகா, 18,963, பல்லடம் தாலுகா , 17,465, திருப்பூர் தாலுகா, 7,266, காங்கயம் தாலுகா, 7,676 ஏக்கர் என, 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பி.ஏ.பி., அதிகாரிகள் கூறியதாவது :பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு, இறுதிச்சுற்றுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பிரதானக்கால்வாயில் தண்ணீர் திறப்பு, நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து, வரும், 9ம் தேதி முழுமையாக நிறுத்தப்படும்.தொடர்ந்து, தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு சேகரித்தல், பி.ஏ.பி., பிரதானக்கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்கள் பராமரிப்பு பணிகள், மடைகள் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் கோரிக்கை அடிப்படையில், முதல் மண்டல பாசனத்திற்கு, ஜன.,24 முதல் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.திருமூர்த்திஅணை நிலவரம்நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 60 அடியில், 40.83 அடியாக இருந்தது. நீர்இருப்பு, 1,182 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, 781 கனஅடி நீரும், பாலாற்றின் மூலம், வினாடிக்கு, 36கனஅடி நீர் என, வினாடிக்கு, 816 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து, பிரதான கால்வாயில், வினாடிக்கு, 847 கனஅடி நீரும், உயர்மட்ட கால்வாயில், 6 கனஅடி நீரும், தளி கால்வாயில், 61 கனஅடி நீர், குடிநீர் என, 943 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X