பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிலையத்தில் பேட்டரி பழுதால் வாடிக்கையாளர்கள் அவதி

Added : ஜன 08, 2020
Share
Advertisement

செஞ்சி:பெருவளூர் பி.எஸ்.என்.எல்., தொலை பேசி நிலையத்தில் பேட்டரி பழுதானதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேல்மலையனூர் தாலுகா பெருவளூர் கிராமத்தில் 3,500 பேர் வசிக்கின்றனர். இங்கு 2004ம் ஆண்டு பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிலையம் 125 லேண்ட் லைன் இணைப்புகளுடன் தொடங்கப்பட்டது.இன்று தொலைபேசி நிலையத்தில் இருந்து பெருவளூர், சொக்கபள்ளம், அருள்நாடு, பார்ப்பந்தாங்கள், மரக்கோணம், கூடுவாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன.அதன்பிறகு 2006ம் ஆண்டு முதன் முறையாக மொபைல்போன் டவர் அமைக்கப்பட்டது.
டவரில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் பயனடைந்து வந்தனர்.பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இந்த தொலைபேசி பேசி நிலையத்தை மின்சாரம் இல்லாத போதும் இயங்கும் வகையில் பேட்டரிகளுடன் இணைத்து மேம்படுத்தினர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டரிகள் பழுதடைந்ததால், மின்சாரம் நின்றதும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பி.எஸ்.என்.எல்., மொபைல் போன்கள் செயலிழந்து விடுகின்றன.
இதனால் நாளுக்கு நாள் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 125 இணைப்புகளுடன் தொடங்கப்பட்ட தொலைபேசி நிலையத்தில், தற்போது 10க்கும் குறைவான தொலைபேசி இணைப்புகளே உள்ளன.இந்த கிராமத்தில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கைத்தறி நெசவாளர் சங்கம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு துணை சுகாதார நிலையம் ஆகியன உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கு இணையதள வசதி இதன் மூலமே கிடைத்து வருகிறது.
மின்சாரம் தடைபடும் போது இணையதள வசதி இன்றி அலுவலகப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.எனவே, இங்குள்ள பேட்டரிகளை பழுது நீக்கி மின்சாரம் இல்லாத நேரங்களிலும் தொலைபேசி இணைப்புகள் இயங்கவும், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தடையின்றி மொபைல் போனை பயன்படுத்தவும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X