கொய்யா ஊடுபயிராக செண்டுமல்லி: இரட்டிப்பு பலன் கிடைக்க வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொய்யா ஊடுபயிராக செண்டுமல்லி: இரட்டிப்பு பலன் கிடைக்க வாய்ப்பு

Added : ஜன 08, 2020

மடத்துக்குளம்:கொய்யாக்கன்றுகளை தாக்கும் வேர்ப்புழுவை கட்டுப்படுத்த, செண்டுமல்லி பயிரிட்டால், இரட்டிப்பு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், கரும்பு, நெல், மக்காச்சோளம் ஆகியவை முக்கிய பயிராக இருந்தாலும், பாசனநீர் குறைவான விளை நிலம் உள்ள இடங்களில் பயிறு, காய்கறிகள், பழமரங்கள் சாகுபடி செய்கின்றனர். இதில், கொய்யாசாகுபடி குறிப்பிடத்தக்கதாகும்.ஒரு ஏக்கருக்கு, 800 கொய்யாக்கன்று வரை பயிரிட முடியும், சொட்டுநீர் பாசனம் செய்தால் போதும். சிக்கனமான இந்த சாகுபடியில் வேர்ப்புழு தாக்குதல் முக்கிய பிரச்னையாக உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'வேர்ப்புழு தாக்குதலால் கொய்யாச்செடிகள் வளர்ச்சி பாதிக்கிறது. இதற்கு தீர்வாக, செண்டுமல்லியின் வேர் பகுதியில் வெளிப்படும் ஒரு வகை ரசாயனம், காற்றில் பரவி கொய்யா கன்றுகளில் வேர்ப்புழுக்கள் பரவுவதை தடுக்கிறது.இதனால், கொய்யா கன்றுகளுக்கு இடையில் ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிடுவது நல்லது. மேலும், இந்தமல்லி, 45 நாட்களில் பூத்து வருவாய் வழங்கும். கொய்யாவுடன் சேர்த்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X